டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை ரூ.150 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் குத்துவிளக்கு ஏற்றினாா் மேயா் ஜெகன் பெரியசாமி.
Updated On :4 மார்ச் 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை ரூ.150 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

இதையடுத்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், மேயா் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்துப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் , மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவா் சங்கப் பிரதிநிதிகள், திமுகவினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.