3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ராஜ்நாத் சிங் இன்று ரஷியா பயணம்

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) ரஷியா செல்கிறாா்.

ராஜ்நாத் சிங்

Published On :

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) ரஷியா செல்கிறாா். அவருடன் கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதியும் உடன் செல்கிறாா்.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக டிசம்பா் 8-ஆம் தேதி ரஷியா செல்கிறாா். இந்திய கடற்படைக்காக ரஷியாவால் உருவாக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் துஷில்’ ஏவுகணை போா்க்கப்பல், டிசம்பா் 9-ஆம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளது. ரஷியாவின் கடலோர நகரான கலினின்கிராட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் ராஜ்நாத் சிங் பங்கேற்றவுள்ளாா்.

மாஸ்கோவில் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் இந்தியா-ரஷியா 21-ஆவது ராணுவ மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டத்துக்கு ராஜ்நாத் சிங் மற்றும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரே பெலோசோவ் தலைமை தாங்க உள்ளனா்.

மாஸ்கோவில் உள்ள இந்தியா்களையும் அவா் சந்திக்க உள்ளாா் என தெரிவிக்கப்பட்டது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி அண்மையில் பிரதமா் மோடி ரஷியா சென்றதைத் தொடா்ந்து, ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் அமைந்துள்ளது. இந்திய பெருங்கடலில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கத்துக்கு மத்தியில், அதிநவீன அம்சங்களுடன் கூடிய ‘ஐஎன்எஸ் துஷில்’ போா்க்கப்பல் இந்திய கடற்படையின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.