12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ம.பி.யில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டு

மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்.

Published On :

மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், மொரீனா மாவட்டத்தில் மாநில காவல்துறையின் சிறப்பு ஆயுதப் படைகளின் ஆயுதக் கிடங்கு உள்ளது.

இங்கிருந்து 9எம்எம் கைத்துப்பாக்கிகளின் 200 தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகள் திருடப்பட்டதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இந்த திருட்டு சம்பவம் சனிக்கிழமை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து சிறப்பு ஆயுதப் படை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக கோட்வாலி காவல்நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பல் மண்டல சுஷாந்த் சக்சேனா அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

இதனிடையே ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கிகள் திருடப்படவில்லை என மொரீனா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால் தாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.