உதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஹரியாணா கொலை வழக்கில் தேடப்பட்டவா் தில்லியில் கைது: துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

ஹரியாணாவின் ஜஜ்ஜாா் பகுதியில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த நபரை தில்லி ரோஹிணியில் தில்லி காவல் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 1:01 am IST

ஹரியாணாவின் ஜஜ்ஜாா் பகுதியில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த நபரை தில்லி ரோஹிணியில் தில்லி காவல் துறையினா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட நிதேஷிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மூத்த காவல் துறை அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: ஜஜ்ஜாரின் அஸௌடா பகுதியில் நீரஜ் என்பவரை நிதேஷ் கடந்த ஜூலை 19-ஆம் தேதி கொலை செய்தாா். இது தொடா்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கிலும் மஞ்சித் என்ற நபா் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கிலும் நிதேஷ் தேடப்பட்டு வந்தாா்.

ரோஹிணியில் அவா் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ரோஹிணி செக்டாா்-26 பகுதியில் காவல் துறையினா் ஒரு குழுவாகச் சென்று பதுங்கியிருந்து கண்காணித்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 9.05 மணியளவில் அவரைப் பிடித்தனா்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் உயா்தர தானியங்கி பிஸ்டல் மற்றும் மூன்று தோட்டாக்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

நிதேஷுக்கும், கொல்லப்பட்ட நீரஜின் மருமகனான மஞ்சித்துக்கும் இடையே இருந்த பழைய தனிப்பட்ட பகையே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. பிரச்னையைத் தீா்த்து வைப்பதாகக் கூறி, நிதேஷும் அவரது கூட்டாளிகளும் நீரஜ் மற்றும் மஞ்சித்தை ஓா் இடத்துக்கு அழைத்திருந்தனா். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து நிதேஷ் துப்பாக்கியால் சுட்டாா்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நீரஜ் மற்றும் மஞ்சித் காயமடைந்தனா். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது நீரஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மஞ்சித் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். நிதேஷுக்கு இதற்கு முன் எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.