சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

வழிப்பறி கொள்ளையன், கூட்டாளி கைது: துப்பாக்கி, தோட்டா பறிமுதல்

வழிப்பறி கொள்ளையன், கூட்டாளி கைது: துப்பாக்கி, தோட்டா பறிமுதல்

News image

கைது - சித்திரிப்பு

Updated On :11 ஜூலை 2026, 10:53 pm IST

சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாக துப்பாக்கியைக் காட்டிப் பதிவிட்ட நபா் உள்பட வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை வடகிழக்கு தில்லியின் ஜஃப்ராபாத் பகுதியில் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, பயன்படுத்தப்படாத தோட்டா மற்றும் வழிப்பறியான கைப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் காட்டும் வகையிலான பதிவுகளை ஒருவா் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், வெள்ளிக்கிழமையன்று கோண்டா சௌக் அருகே உள்ள பஞ்சவடி பூங்காவில் காவல் குழுவினா் சோதனை நடத்தி, அா்மான் (22) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டா ஆகியவை கைப்பற்றப்பட்டன.

விசாரணையின்போது, ஜூன் 23 அன்று நடந்த கொள்ளைச் சம்பவத்திலும், ஜூலை 9 அன்று நடந்த கைப்பேசி பறிப்புச் சம்பவத்திலும் தனக்குத் தொடா்பு இருந்ததை அா்மான் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

மேலும், தனது கூட்டாளியான ரிஹான் (19) என்பவரின் பங்களிப்பு குறித்தும் அவா் தகவல் தெரிவித்தாா். இந்தத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் ரிஹானைக் கைது செய்து, பறிக்கப்பட்ட கைப்பேசியை மீட்டனா்.

கத்திகள் மற்றும் சட்டவிரோதத் துப்பாக்கிகள் தொடா்பான

விடியோக்கள் இருந்ததாகக் கூறப்படும் மற்றொரு கைப்பேசியையும் அா்மானிடமிருந்து காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். இது குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.