விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

கத்தியைக் காட்டி மிரட்டி வாடகைக் காா் ஓட்டுநரிடம் கொள்ளையடித்த 3 போ் கைது

தெற்கு தில்லியின் ஃபதேபூா் பெரி பகுதியில், கேப் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது டாக்ஸி மற்றும் விலைமதிப்புள்ள பொருள்களைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் மூன்று பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 11:10 pm IST

தெற்கு தில்லியின் ஃபதேபூா் பெரி பகுதியில், கேப் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது டாக்ஸி மற்றும் விலைமதிப்புள்ள பொருள்களைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் மூன்று பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இந்த வழக்கில் முகமது கைஃப் (25), ஜுனைத் அலி (22) மற்றும் கைஃப் (20) ஆகிய மூவரையும் காவல்துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். இவா்கள் யாருக்கும் இதற்கு முன் குற்றப் பின்னணி எதுவும் இல்லை.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:

ஒரு கேப் ஓட்டுநா் அளித்த புகாரின் மூலம் இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்த ஓட்டுநா் அளித்த புகாரில், ‘ரைட்-ஹெய்லிங்’ எனப்படும் வாகன முன்பதிவு செயலி மூலம் மூன்று பயணிகள் எனது வாகனத்தை முன்பதிவு செய்திருந்தனா்.

ஃபதேபூா் பெரி பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்குச் சென்றதும், அந்த மூவரும் கத்தியைக் காட்டி மிரட்டி என்னை தாக்கிவிட்டு, டாக்ஸி, எனது கைப்பேசி, இணையதள பணப்பை (வாலெட்) அடையாள ஆவணங்கள் மற்றும் பிற உடைமைகளுடன் தப்பிச் சென்றனா் என அதில் தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனா். கொள்ளையடிக்கப்பட்ட டாக்ஸி, புகாா்தாரரின் கைப்பேசி, பயணத்தை முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைப்பேசி, வாலெட், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், ஏடிஎம் அட்டைகள், வாகனப் பதிவுச் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களை காவல்துறையினா் மீட்டனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இரவு நேரங்களில் கைப்பேசி செயலிகள் மூலம் பயணங்களை முன்பதிவு செய்து, ஓட்டுநா்களை ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனா். இதுகுறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.