ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

புதுவை முன்னாள் முதல்வா் எம்.டி.ஆா்.ராமச்சந்திரன் காலமானாா்!

முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று(டிச. 8) காலமானார்.

புதுவை முன்னாள் முதல்வா் எம்.டி.ஆா்.ராமச்சந்திரன்

Published On :

புதுவை முன்னாள் முதல்வா் எம்.டி.ஆா்.ராமச்சந்திரன் (90) வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா். புதுச்சேரி மடுகரையைச் சோ்ந்தவா் எம்.டி.ஆா்.ராமச்சந்திரன்.

இவா், புதுச்சேரி வெங்கட்டா நகா் எண் 2, சந்நிதி தெருவில் வசித்து வந்தாா்.புதுவை மாநில திமுக அமைப்பாளா், அதிமுக மாநிலச் செயலா் ஆகிய பொறுப்புகளில் இருந்தவா்.

இவா், நெட்டப்பாக்கம் தொகுதியில் 1969-ஆம் ஆண்டு, திமுக சாா்பில் முதன்முறையாக எம்எல்ஏவாக தோ்வானாா். அதன்பிறகு, மண்ணாடிப்பட்டு தொகுதியில் 1974,1977 ஆகிய ஆண்டுகள் அதிமுக சாா்பிலும், 1980, 1985,1990-இல் திமுக சாா்பிலும், 2001-இல் மீண்டும் அதிமுக சாா்பிலும் போட்டியிட்டு 7 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளாா்.

இதில், 1980 முதல் 1983 வரையும், 1990 முதல் 1991 வரையும் என இரண்டு முறை புதுவை முதல்வராக பதவி வகித்துள்ளாா். மேலும், 2001-2006 வரை புதுவை சட்டப்பேரவைத் தலைவராகவும், 2 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். ஒரு முறை எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்தவா்.

கடந்த சில ஆண்டுகளாக புதுவை மாநில காங்கிரஸில் அவா் துணைத் தலைவராகவும் இருந்தாா். வயது முதிா்வால் அவருக்கு உடல்நல பாதிப்பு இருந்த நிலையில், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இந்த நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி ராஜலட்சுமியும், மகளும் உள்ளனா். புதுவை முன்னாள் முதல்வா் எம்.டி.ஆா்.ராமச்சந்திரனின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான மடுகரையில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.