மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தில்லியில் தங்கும் விடுதியின் மாடியில் இருந்து விழுந்த 2 மாணவர்கள் பலி

தில்லியில் தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து விழுந்த 2 மாணவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :9 டிசம்பர் 2024, 9:19 am

தில்லியில் தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து விழுந்த 2 மாணவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் தில்லி ரோகிணியில் உள்ள தங்கும் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து இரண்டு மாணவர்கள் திங்கள்கிழமை பலியானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பலியான மாணவர்கள் ராஜஸ்தானின் பரத்பூரில் வசிக்கும் இஷான் மற்றும் தில்லியின் பாலம் காலனியில் வசிக்கும் ஹர்ஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும இருவரும் தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பகவான் பரசுராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றில் பிபிஏ படித்து வந்தனர் எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, "அதிகாலை 1:10 மணியளவில் கேஎன்கே மார்க் காவல் நிலையத்தில் இரண்டு சிறுவர்கள் கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து விழுந்து விட்டதாக அழைப்பு வந்தது.

காவல்துறை குழு உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டது.

விசாரணையில், இரண்டு பேரும், தங்கும் விடுதியின் நான்காவது மாடியில் உள்ள அறையில் இருந்த ஜன்னல் வழியாக விழுந்து விட்டனர் என்று தெரிவித்தார்.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். முன்னதாக மாணவர்கள் நான்காவது மாடியில் இருந்து குதித்ததாக போலீஸார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.