மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மத்திய அமைச்சருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜார்கண்டைச் சேர்ந்த நபர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

கோப்புப்படம்.

Updated On :9 டிசம்பர் 2024, 8:28 am

மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜார்கண்டைச் சேர்ந்த நபர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் ராஞ்சியில் வசிப்பவர் என்றும் தற்போது அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வேறொருவரின் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி சஞ்சய் சேத்துக்கு மிரட்டல் விடுத்ததாக போலீஸார் மேலும் கூறியுள்ளனர்.

மத்திய பாதுகாப்புத் துறை இணைமைச்சராக பதவிவகிப்பவர் சஞ்சய் சேத். இவரது மொபைல் எண்ணுக்கு அண்மையில் மிரட்டல் செய்தி ஒன்று வந்திருக்கிறது.

அதில், பேசிய நபர் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என கேட்டிப்பதோடு கொலை மிரட்டலும் விடுதிருக்கிறார்.

மேலும் இதுதொடர்பாக தில்லி மற்றும் ஜார்கண்ட் காவல் துறையினரிடம் கடந்த வெள்ளிக்கிழமை அவர் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து டிஜிபி உள்ளிட்ட தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் சஞ்சய் சேத்தை சந்தித்து விவரம் கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.