ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மகாராஷ்டிர பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு!

மகாராஷ்டிரத்தின் 15-வது சட்டப் பேரவையின் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு..

News image
ராகுல் நர்வேகர்
Updated On :9 டிசம்பர் 2024, 6:10 am

DIN

மகாராஷ்டிரத்தின் 15-வது சட்டப் பேரவையின் தலைவராக பாஜக எல்எம்ஏ ராகுல் நர்வேகர் திங்கள்கிழமை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகாராஷ்டிர பேரவையின் மூன்று நாள் சிறப்பு கூட்டத் தொடா் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் உள்பட 173 எம்எல்ஏக்கள் பதவியேற்றனா்.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, பேரவைத் தலைவா் பதவிக்கு மும்பையின் கொலபா தொகுதி பாஜக எம்எல்ஏ ராகுல் நா்வேகா் வேட்புமனு தாக்கல் செய்தாா். முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தங்களது தரப்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என எதிா்க்கட்சிகள் முடிவு செய்தன. இதையடுத்து, முதல்வா் ஃபட்னவீஸை சந்தித்த மகா விகாஸ் அகாடி கூட்டணி தலைவா்கள், பேரவை நடைமுறையின்படி துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தினா். பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியையும் அவா்கள் கோரினா்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

மகாராஷ்டிர பேரவைத் தலைவராக ராகுல் நா்வேகா் இன்று முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடா்ந்து, பேரவையில் ஃபட்னவீஸ் தலைமையிலான மகாயுதி கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். பின்னா், பேரவை மற்றும் மேலவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநா் சி.பி. ராதா கிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில், பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களுடன் அமோக வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் பாஜக 132, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களைக் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.