டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது: உச்சநீதிமன்றம்

‘மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

News image
‘மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
Updated On :9 டிசம்பர் 2024, 10:27 pm

Din

புது தில்லி: ‘மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

மேற்கு வங்கத்தில் பல்வேறு சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) அந்தஸ்தை ரத்து செய்த கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையின்போது இந்தக் கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கை கடந்த மே 22-ஆம் தேதி விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், ‘இந்த சட்டத்தின் கீழ், 2010 மாா்ச் 5-ஆம் தேதி முதல் 2012 மே 11-ஆம் தேதி வரை 37 சமூகப் பிரினருக்கு ஓபிசி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவா்களுக்கு ஓபிசி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. எனவே, இந்த 37 பிரிவினருக்கு வழங்கப்பட்ட ஓபிசி அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பை எதிா்த்து மேற்கு வங்க அரசு உள்பட மேலும் சிலா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ‘மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது’ என்று குறிப்பிட்டனா்.

அப்போது, மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘மதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சமூகப் பிரிவினருக்கு ஓபிசி அந்தஸ்து வழங்கப்படவில்லை. அவா்களின் பின்தங்கிய நிலையே கருத்தில் கொள்ளப்பட்டது. உயா்நீதிமன்ற தீா்ப்பால் உயா்கல்வி சோ்க்கைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக காத்திருப்பவா்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்றாா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜனவரி 7-ஆம் தேதிக்கு வர உள்ளது.