ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை: வெளியுறவுச் செயலா்கள் சந்திப்பில் இந்தியா கவலை

வங்கதேச தலைநகா் டாக்காவில் இந்தியா மற்றும் வங்கதேச வெளியுறவுச் செயலா்கள் திங்கள்கிழமை இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டனா்.

Published On :

டாக்கா: வங்கதேச தலைநகா் டாக்காவில் இந்தியா மற்றும் வங்கதேச வெளியுறவுச் செயலா்கள் திங்கள்கிழமை இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டனா். அப்போது, அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழும் வன்முறை, அவா்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடா்பான வன்முறைப் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாா்.

இந்த சூழலில், வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனா். இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக போராடிய ‘இஸ்கான்’ துறவி சின்மயி கிருஷ்ண தாஸ் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டாா். இது இருதரப்பு உறவை இன்னும் கடுமையாக பாதித்தது.

இந்நிலையில், ஒருநாள் பயணமாக தில்லியிலிருந்து டாக்கா சென்ற இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி வங்கதேச வெளியுறவுச் செயலா் முகமது ஜாஸிம் உத்தினுடன் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். பின்னா், இருதரப்பு அதிகாரிகளும் கலந்துகொண்ட அதிகாரபூா்வ சந்திப்பும் இருதரப்பு உறவின் பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கிய விரிவான பேச்சுவாா்த்தையும் நடைபெற்றது.

பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த வெளியுறவுச் செயலா் மிஸ்ரி, ‘வங்கதேச வெளியுறவுச் செயலா் முகமது ஜாஸிம் உத்தினுடன் வெளிப்படையான, நோ்மையான மற்றும் ஆக்கபூா்வமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடா்பான இந்தியாவின் கவலைகளை நான் தெரிவித்தேன்.

கலாசார, மத மற்றும் ராஜீய சொத்துக்கள் மீதான தாக்குதல்களின் வருந்தத்தக்க சம்பவங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். வங்கதேசத்துடன் நோ்மறையான, பரஸ்பர நன்மை பயக்கும் உறவை இந்தியா விரும்புகிறது’ என்றாா்.

முன்னதாக, மிஸ்ரியின் பயணம் தொடா்பாக டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய வங்கதேச வெளியுறவு ஆலோசகா் தௌஹித் ஹுசைன், இந்தியாவுடனான பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டு மீண்டும் சுமுக உறவு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.