அதானி விவகாரம் பற்றி விவாதிக்க பாஜக அரசு பயப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களுக்கு பல்வேறு மாநில மின்பகிா்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ. 2,239 கோடி) லஞ்சம் வழங்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
மோடி, அதானி புகைப்படங்கள் அச்சிடப்பட்ட பைகளை அணிந்து எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய பிரியங்கா காந்தி, 'அதானி லஞ்சம் குறித்து விவாதிக்க பாஜகவினர் பயப்படுகிறார்கள். நான் நாடாளுமன்றத்திற்கு புதிதாக வந்திருக்கிறேன். நாடாளுமன்றத்தில் இதுவரை பிரதமர் மோடியைப் பார்க்கவில்லை. நாங்கள் ஏன் இந்த பிரச்னையை எழுப்பக்கூடாது?' என்றார்.
முன்னதாக, அவை தொடங்குவதற்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பிரியங்கா காந்தி,
'நாங்கள் ஒவ்வொரு நாளும் விவாதம் நடத்த முயற்சிக்கிறோம், ஆனால் அவர்கள்(பாஜக) விவாதம் நடத்த விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் ஏதோவொரு காரணத்திற்காக அவையை ஒத்திவைக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மோடி அரசை வீழ்த்தலாம்! - பிரியங்கா காந்தி

எல்டிஎஃப் ஊழல் மிகுந்த அரசு என்பது குழந்தைக்குக்கூட தெரியும்: பிரியங்கா காந்தி

பிரதமரின் தவறான கொள்கைகளால் மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் அதிகரிப்பு - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


