
இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது என சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் எந்த முயற்சியாக இருந்தாலும், அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகள் வரவேற்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பட்ட எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்துவரும் நிலையில், சஞ்சய் ரெளத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் சஞ்சய் ரெளத் பேசியதாவது,
''எங்கள் கூட்டணியில் உள்ள சில கட்சியினருக்கு மாறுபட்ட கருத்துகள் உண்டு. திரிணமூல் காங்கிரஸோ, லாலு பிரசாத் யாதவோ, அகிலேஷ் யாதவோ யாராக இருந்தாலும் இந்தியா கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கூறலாம். நாம் அனைவரும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளோம். யாரேனும் கூட்டணி தொடர்பாக புதிதாக கூறினாலோ அல்லது கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என விரும்பினாலோ, அதனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க வேண்டும். அவர்கள் (காங்கிரஸ்) கருத்துகள் மூலம் இந்த விவகாரம் முன்னோக்கி நகரும்.
ராகுல் காந்தியின் தலைமையில் யாரும் குறை கூறவில்லை. யாரும் கேள்வி எழுப்பவில்லை. அவர் எங்கள் அனைவருக்குமான தலைவர்'' என சஞ்சய் ரெளத் குறிப்பிட்டார்.
இந்தியா கூட்டணிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் என பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் எனக் குறி வருகின்றனர்.
இதையும் படிக்க | மளிகைக் கடையில் ராகுல் காந்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.