தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காலிஸ்தான் ஆதரவு இந்திய வம்சாவளியை அட்டர்னி ஜெனரலாக நியமித்த டிரம்ப்!

அமெரிக்க அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை நியமித்துள்ளது பற்றி...

News image
ஹர்மீத் தில்லான்- படம்: எக்ஸ்
Updated On :11 டிசம்பர் 2024, 4:45 am

DIN

அமெரிக்க நீதித் துறையின் உயர் பதவிக்கு காலிஸ்தான் ஆதரவாளராக கருதப்படும் இந்திய வம்சாவளியான ஹர்மீத் தில்லானை நியமித்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் 20ஆம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார். முன்னதாக, அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் மற்றும் பிற முக்கிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.

இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் இடம்பெற்றுள்ள நிலையில், உதவி அட்டர்னி ஜெனலராக இந்திய வம்சாவளிப் பெண்ணை நியமித்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

“அமெரிக்க நீதித்துறை சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக ஹர்மீத் தில்லானை பரிந்துரைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஹர்மீத் நாட்டின் தலைசிறந்த தேர்தல் வழக்கறிஞர்களில் ஒருவர், சட்டப்பூர்வ வாக்குகள் அனைத்தும் எண்ணப்படுவதை உறுதிசெய்ய போராடுகிறார்.

ஹர்மீத் சீக்கிய மத சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர். இவர் அமெரிக்க நீதித்துறையில் நமது அரசியலமைப்பு உரிமைகளின் பாதுகாவலராக இருப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹர்மீத் தில்லான் யார்?

இந்தியாவின் சண்டீகர் நகரில் பிறந்த ஹர்மீத்(வயது 54) சிறுவயதிலேயே அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். டார்த்மவுத் கல்லூரி மற்றும் விர்ஜீனியா சட்டம் பயின்று, கலிஃபோர்னியாவில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு, குடியரசுக் கட்சியின் தேசியக் குழுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த ஹர்மீத், குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் சீக்கிய மதப் பிரார்த்தனை வாசித்ததால் இனவாத தாக்குதலுக்கு உள்ளானார்.

காலிஸ்தான் ஆதரவாளர் என்று ஹர்மீத்தை சிலர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.