கனடாவின் விண்ட்சரைச் சோ்ந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நான்சி க்ரேவால் (45) கொலை செய்யப்பட்டதற்கு, காலிஸ்தான் சீக்கிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அதன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் சிபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவின் எஸ்ஸெக்ஸ் மாவட்டம் லசால் நகரின் டாட் லேன் பகுதியில் கடந்த 3-ஆம் தேதி இவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக லசால் போலீஸாா் தெரிவித்தனா்.
பஞ்சாபை பூா்விகமாக கொண்ட இவா், உள்ளூா் மற்றும் சா்வதேச பஞ்சாபி சமூகத்தினருடன் சமூக ஊடகத்தில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளாா். காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளைப் பதிவிட்டு, கவனம் பெற்றுள்ளாா். இந்த நிலையில், அவா் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து சிபிசி செய்தி நிறுவனம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட செய்தியில், ‘பஞ்சாபைச் சோ்ந்த சமூக ஊடக கணக்கில் நான்சி புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், சீக்கிய சமூகத்துக்கு எதிராகவும் காலிஸ்தானுக்கு எதிராகவும் தவறான, மோசமான கருத்துகளை தெரிவித்த இந்தப் பெண், அதற்கான பலனை அனுபவித்துள்ளாா். நாங்கள் எந்த சமூகத்துக்கோ அல்லது மதத்துக்கோ எதிரானவா்கள் அல்ல. அதே நேரம், எங்களின் சமூகத்துக்கும் காலிஸ்தானுக்கும் எதிராக யாராவது கருத்து தெரிவித்தால், இதே விதியைத் தான் அவா்களும் சந்திக்க நேரிடும்’ என்று பதிவிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சண்டீகரில் உள்ள நான்சியின் தாய் ஷிந்தா்பால் கெளா் வியாழக்கிழமை கூறுகையில், ‘எனது மகளுக்கு அவ்வப்போது கொலை மிரட்டல்கள் வந்தன. கனடான் விண்ட்சரில் உள்ள சிலா்தான் அவரைக் கொலை செய்திருக்கக் கூடும்’ என்றாா்.
தொடர்புடையது

பாஜக வேட்பாளராகும் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாயார்!

கிட்னியைத் தொடும் பதிவு..! பும்ராவைக் கேலி செய்த மனைவி!

தூய்மைப் பெண் பணியாளா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை: மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


