மணிப்பூர் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் முயற்சி: பைரன் சிங்

அமைதியை நிலைநாட்ட அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பைத் தர வேண்டும்.
பைரன் சிங்
பைரன் சிங்
Published on
Updated on
1 min read

மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணக் கால அவகாசம் எடுக்கலாம் என்று அந்த மாநில முதல்வர் என்.பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

நூபி லானின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அவர்,

மணிப்பூரில் நிலவிவரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறன. இருப்பினும், நிலைமை சீராகவும், தீர்வைக் கொண்டுவருவதற்கு காலஅவகாசம் எடுக்கும் என்று கூறினார்.

மேலும், ஆறு காவல் நிலையப் பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பைத் தர வேண்டும்.

பின்னர், மியான்மர் அகதிகள் நடத்தப்படுவது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங், விமர்சனம் செய்பவர்கள் இங்கு வந்து அடிப்படை உண்மைகளைப் பார்க்க வேண்டும். அனைவரும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள். வேறுபாடுகள் இல்லை என்று அவர் கூறினார்.

பிரிட்டிஷ் அநீதிக்கு எதிராக 1904 மற்றும் 1939ஆம் ஆண்டுகளில் மணிப்பூர் பெண்கள் ஆற்றிய பங்கை நினைவுகூரும் வகையில் நுபி லால் நுமித் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஸ்வஜித் சிங் கூறுகையில், பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூரவும், அவர்களின் பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் நூபி லால் அனுசரிக்கப்படுகிறது என்றும், இது ஒவ்வொரு மணிப்பூரிக்கும் பெருமையான தருணம் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com