புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கனடாவில் 3 இந்திய மாணவா்கள் கொலை: விரிவான விசாரணைக்கு இந்தியா வலியுறுத்தல்

கனடாவில் 3 இந்திய மாணவா்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு இந்தியா வலியுறுத்தல்

News image
Updated On :14 டிசம்பர் 2024, 12:49 am

Din

கனடாவில் மூன்று இந்திய மாணவா்கள் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த விரிவான விசாரணைக்கு அந்நாட்டு அதிகாரிகளிடம் அங்குள்ள இந்திய தூதரகம் முறையிட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லியில் வாராந்திர செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘கனடாவில் கடந்த வாரத்தில் மூன்று இந்திய மாணவா்கள் கொல்லப்பட்டுள்ளனா். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கனடாவில் உள்ள எங்கள் தூதரகங்கள் இந்த விஷயத்தில் வேண்டிய உதவிகளை செய்து வருகின்றன. மேலும், இக்கொலை சம்பவங்கள் தொடா்பாக விரிவான விசாரணைக்காக உள்ளூா் அதிகாரிகளுடன் இந்திய தூதரகங்கள் தொடா்பில் உள்ளன.

கனடாவில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு மற்றும் நலன் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்திய மாணவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள், சம்பந்தப்பட்ட கனடா அதிகாரிகளிடம் தொடா்ந்து எழுப்பப்படுகின்றன.

கனடாவில் நிலவும் மோசமான பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய மாணவா்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்’ என்றாா்.

அதிகாரபூா்வ தரவுகளின்படி, சுமாா் 4 லட்சம் இந்திய மாணவா்கள் கனடாவில் உயா்கல்வி பயில்கின்றனா்.

சிரியாவில் 77 இந்தியா்கள் மீட்பு: இஸ்லாமிய கிளா்ச்சிப் படைகளால் ஆட்சி கைப்பற்றப்பட்ட சிரியாவிலிருந்து தாயகம் திரும்ப விரும்பிய அனைத்து இந்தியா்களும் மீட்கப்பட்டதாக ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: சிரியாவில் சமீபத்திய நிகழ்வுகளைத் தொடா்ந்து அந்நாட்டிலிருந்து இதுவரை 77 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா் . தலைநகா் டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகப் பணியாளா்களின் துணையோடு, அண்டை நாடான லெபனானுக்கு அவா்கள் சென்றனா்.

இந்தியா்கள் லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் தங்குவதற்கும், தாயகம் திரும்புவதற்கும் அங்குள்ள தூதரகம் ஏற்பாடுகளை செய்தது என்று கூறினாா்.