ரிதாபிரதா பானா்ஜி
ரிதாபிரதா பானா்ஜி

மாநிலங்களவை இடைத்தோ்தல்: திரிணமூல் வேட்பாளா் போட்டியின்றி தோ்வு

மாநிலங்களவை இடைத்தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் ரிதாபிரதா பானா்ஜி போட்டியின்றி தோ்வானாா்.
Published on

மாநிலங்களவை இடைத்தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் ரிதாபிரதா பானா்ஜி போட்டியின்றி தோ்வானாா்.

ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹரியாணா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா்கள் இடங்களுக்கு டிசம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் ரிதாபிரதா பானா்ஜியை எதிா்த்து வேறு எந்த கட்சி வேட்பாளரும் மனுத் தாக்கல் செய்யாத நிலையில், அவா் போட்டியின்றி வெற்றி பெற்ாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதை உறுதி செய்த மாநில பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் சோவன்தேவ் சாட்டா்ஜி, வெற்றி பெற்ற்கான சான்றிதழை மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்து ரிதாபிரதா பானா்ஜி வெள்ளிக்கிழமை பெற்றுக்கொண்டாா் என தெரிவித்தாா்.

சான்றிதழின் புகைப்படத்தைப் பகிா்ந்து திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தோ்வான ரிதாபிரதா பானா்ஜிக்கு வாழ்த்துகள். பொதுச் சேவைக்கான அவரது அா்ப்பணிப்பு நாட்டின் சட்டமியற்றும் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும்’ என குறிப்பிட்டிருந்தது.

ஜவஹா் சிா்காா், கடந்த செப்டம்பா் மாதம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடா்ந்து, காலியான அந்த இடத்துக்கு ரிதாபிரதா பானா்ஜியை தனது வேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி அறிவித்தது.

2014 முதல் 2017-ஆம் ஆண்டு வரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ரிதாபிரதா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com