இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபர்: விடியோ வைரல்

பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபரின் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மெட்ரோவில் பிச்சை எடுக்கும் நபர்.

Updated On :

பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபரின் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த விடியோவில், கர்நாடக மாநிலம், பெங்களூரு ரயிலுக்குள் மாற்றுத்திறனாளி ஒருவர் பயணியிடம் பிச்சை எடுக்கிறார். பின்னர் அந்த நபர், அடுத்த பயணியிடமும் இதேபோல் பிச்சை கேட்கிறார்.

இதனை பயணிகளில் ஒருவர் விடியோ எடுத்து இணையதளங்களில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பெங்களுரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது, இது சனிக்கிழமை நடந்ததாக நம்பப்படுகிறது, இருப்பினும் சரியான தேதி மற்றும் நேரத்தைக் கண்டறிய விசாரணை இன்னும் நடந்து வருகிறது.

இந்த நபர் எங்கு ஏறினார் என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்.

அவர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது தொப்பி அணிந்திருந்தாரா என்பது கூட எங்களுக்குத் தெரியாது என்று அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மெட்ரோவில் பிச்சை எடுப்பது இது இரண்டாவது சம்பவம் ஆகும் என்றார்.

மெட்ரோ ரயிலில் பிச்சையெடுப்பது விதிமீறலானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.