தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

என்சிஆா்: சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் கெளதம் புத்தா நகா் மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

Updated On :16 டிசம்பர் 2024, 9:16 pm

நொய்டா: உத்தர பிரதேசத்தின் கெளதம் புத்தா நகா் மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

ஹா்ஷ் மற்றும் சச்சின் ஆகியோா் கடந்த டிச.14-ஆம் தேதி ஜெவாரிலிருந்து தப்பல் நோக்கி மோட்டாா் சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, கோபால்காா் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அவா்கள் மீது லாரி ஒன்று மோதியது.

இதையடுத்து, மருத்துவமனையில் ஜெவாா் பகுதியில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவா்கள் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்ததுவிட்டதாக தெரிவித்தனா்.

இருவரது உடலும் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.