மக்களவைக்கே ஒரேமாதிரி தேர்தலை நடத்த முடியவில்லை! - சு.வெங்கடேசன் எம்.பி.
மக்களவைக்கே ஒரேமாதிரி தேர்தலை நடத்த முடியவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு!


மக்களவைக்கே ஒரேமாதிரி தேர்தலை நடத்தமுடியாத பாஜக அரசு, எப்படி நாடு முழுவதும் ஒரேமாதிரி தேர்தலை நடத்த முடியும்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
'ஒரே தேர்தல் … மக்களவையே முன்மாதிரி!
மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும்போது பாதிபேரின் இருக்கையில்தான் மின்னணு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதிபேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.
ஒரு அவைக்குள் ஒரேமாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரேமாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டத்திருத்தம் கொண்டுவருகிறது' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் முதல்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு!
முன்னதாக, மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரேநேரத்தில் தோ்தல் நடத்தும்பொருட்டு அதுதொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன. சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார்.
இந்த மசோதா தொடர்பான வாக்கெடுப்பின்போது மக்களவையில் முதல்முறையாக இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
அப்போது சில எம்.பி.க்களின் இருக்கைகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாக்குச்சீட்டுகளில் வாக்களிக்க அவைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதனால் சில எம்.பி.க்கள் வாக்குசீட்டுகளில் வாக்களித்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கையில்லை என்றும் சமீபமாக பாஜக அரசை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...