ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் 31 உறுப்பினர்கள்!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் மக்களவையில் இருந்து 21 பேரும், மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, தர்மேந்திர யாதவ், கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவின் செல்வகணபதி, ஹரீஷ் பாலயோகி, விஷ்ணுதத் சர்மா, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, அனுராக் சிங் தாக்குர் உள்ளிட்டோரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா 2024 வழிவகை செய்கிறது. இதேபோல புதுச்சேரி, தில்லி, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களின் பேரவைத் தோ்தல்களையும் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து நடத்த முடியும்.
இந்த மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பை தொடா்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் நேற்று (செவ்வாய்க்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்தாா். இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு விரிவாக விவாதித்த பின்னர் அந்தக் குழுவின் விரிவான அறிக்கை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படும். அதன் பிறகு இந்த மசோதா குறித்து அவையில் மீண்டும் விவாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க | மும்பை படகு விபத்து: கடற்படை படகு மோதியதே காரணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.