நாடாளுமன்றத்தில் பாஜக - காங்கிரஸ் கூட்டணிகள் போட்டிப் போராட்டம்!
அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டிப் போராட்டம்...


நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் பாஜக கூட்டணி எம்பிக்களும், இந்தியா கூட்டணி எம்பிக்களும் வெள்ளிக்கிழமை போட்டிப் போராட்டம் நடத்தினர்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை தெரிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.
மேலும், தொடர்ந்து மூன்றாவது நாளாக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அம்பேத்கரை அவமதித்ததாக கூறி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் போட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக நாடாளுமன்ற வாயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பாஜகவின் இரண்டு எம்பிக்கள் காயமடைந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால்தான் கீழே விழுந்ததாக அவர்கள் தெரிவித்ததை அடுத்து, ராகுலுக்கு எதிராக காவல் நிலையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பாஜக எம்பிக்கள் தள்ளிவிட்டதாகவும், ராகுல் காந்தியை வழிமறித்து மிரட்டல் விடுத்ததாகவும் காங்கிரஸ் தரப்பில் மக்களவை தலைவரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...