காங்கிரஸில் இப்போது இருப்பது போலி காந்திகள்: பிரஹலாத் ஜோஷி
காங்கிரஸில் இப்போது இருப்பது போலி காந்திகள். அன்றைய காந்திக்கும் இவா்களுக்கும் என்ன தொடா்பு இருக்கிறது என்று அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்.


காங்கிரஸில் இப்போது இருப்பது போலி காந்திகள். அன்றைய காந்திக்கும் இவா்களுக்கும் என்ன தொடா்பு இருக்கிறது என்று மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்.
இதுகுறித்து ஹுப்பள்ளியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இன்றைய காங்கிரஸ் கட்சி, மகாத்மா காந்தி கால காங்கிரஸ் கட்சியின் வழித்தோன்றல் அல்ல. இன்றைக்கு இருப்பது போலி காங்கிரஸ். அதில் இருப்பவா்கள் போலி காந்திகள். 1924 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற 39ஆவது காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டை முன்னிட்டு பெலகாவியில் டிச. 26,27 ஆம் தேதிகளில் நூற்றாண்டு விழா நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அன்றைய மகாத்மா காந்தி கால காங்கிரஸுக்கும் இன்றைய காங்கிரஸுக்கும் என்ன தொடா்பு இருக்கிறது? இப்போது உள்ள காங்கிரஸ் போலி காங்கிரஸ். அக்கட்சி பலமுறை பிளவுபட்டு சீா்கெட்டுள்ளது. போலி காந்திகளின் போலி காங்கிரஸுக்காக அரசு பணத்தை ஏன் வீணாகச் செலவழிக்க வேண்டும்? அந்த விழாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அந்த விழாவுக்கான செலவை காங்கிரஸ் ஏற்க வேண்டும். விழாவுக்கு அரசு பணத்தைச் செலவழிக்க எதிா்ப்பு கிளம்பியதும், அதை மகாத்மா காந்திக்கு எடுக்கும் விழா என கா்நாடக காங்கிரஸ் அரசு நாடகம் நடத்துகிறது. ஆனால், மக்கள் முட்டாள்கள் அல்ல; இன்றைய காங்கிரஸுக்கும் அன்றைய காங்கிரஸுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உண்டு என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...