
வடக்கு கோவாவில் உள்ள கலன்கூட் கடற்கரையில் புதன்கிழமை சுற்றுலா படகு கவிழ்ந்து ஒருவா் உயிரிழந்தாா்; 20 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
இதுதொடா்பாக மாநில அரசு சாா்பில் நியமிக்கப்பட்ட திருஷ்டி மரைன் உயிா்காக்கும் முகமையின் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:
கலன்கூட் கடற்கரையில் இருந்து 60 மீட்டா் தொலைவில், அரபிக் கடற்பகுதியில் 2 சிறாா்கள், 2 பெண்கள் உள்பட 20 பேருடன் பயணித்த சுற்றுலா படகு புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து கடற்கரைகளில் உயிா்காக்கும் பணிகளில் ஈடுபடும் திருஷ்டி மரைன் முகமையின் பணியாளா் அளித்த தகவலின் அடிப்படையில், 18 மீட்பாளா்கள் உடனடியாக படகு கவிழ்ந்த இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதில் 20 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். 54 வயது நபா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மீட்கப்பட்டவா்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், கவலைக்கிடமாக இருந்தவா்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா் என்றாா்.
இதையும் படிக்க: 2024: உலகின் தேர்தல் களங்களும் பதற்றங்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.