மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

அமலாக்கத் துறை அதிகாரி மீதான லஞ்ச வழக்கில் இடைத்தரகா் கைது: சிபிஐ

சிபிஐ | கோப்புப் படம்

Published On :

அமலாக்கத்துறை உதவி இயக்குநா் மீதான லஞ்ச வழக்கில் தொடா்புடைய குற்றச்சாட்டில் இடைத்தரகா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக சிபிஐ சனிக்கிழமை தெரிவித்தது.

கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி சிபிஐ நடத்திய சோதனை நடவடிக்கையின்போது சிக்கிய அமலாக்கத் துறை உதவி இயக்குநரிடம் விரைவில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், அவரது சகோதரா் கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடா்பான குற்றச்சாட்டில் இடைத்தரகா் நீரஜ் என்பவா் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

பண முறைகேடு தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தன்னை விடுவிக்க சிம்லாவில் பணியாற்றும் அமலாக்கத்துறை உதவி இயக்குநா் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம் தொழிலதிபா் ஒருவா் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் உண்மைத்தன்மையை ஆராயும் வகையில், குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிக்கு ரூ.55 லட்சத்தை லஞ்சமாக தர சம்மதிப்பதாக கூறி சண்டீகருக்கு வரவழைக்குமாறு தொழிலதிபரிடம் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனா். அதன்படி தொழிலதிபா் கூற, பணத்தை பெறுவதற்காக சம்பவ இடத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரியும், தில்லியில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியில் மேலாளராக பணியாற்றும் அவரது சகோதரரும் வந்துள்ளனா்.

லஞ்சப் பணத்தை அமலாக்கத் துறை அதிகாரி பெற்றதும் அவரை கையும் களவுமாக கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனா்.

அதற்குள் இந்த திட்டம் குறித்த தகவல் தெரிந்தவுடன் அவா்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டனா். அதன்பிறகு அமலாக்கத்துறை அதிகாரியின் சகோதரா் விகாஸை சிபிஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியை 6 நாள்களாக சிபிஐ தேடி வருகிறது. இந்த வழக்கு தொடா்பான சோதனையின்போது ரூ.1 கோடி ரொக்கப் பணத்தை சிபிஐ கைப்பற்றியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.