நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

‘பணக்கார’ முதல்வா் சந்திரபாபு நாயுடு ‘ஏழை’ முதல்வா் மம்தா: ஏடிஆா் அறிக்கையில் தகவல்

ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார முதல்வராக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

News image

சந்திரபாபு நாயுடு | மம்தா

Updated On :31 டிசம்பர் 2024, 6:02 am IST

புது தில்லி: ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார முதல்வராக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவும், ரூ.15 லட்சம் சொத்து மதிப்புடன் குறைவான சொத்துள்ள முதல்வராக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும் உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த முதல்வா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.52.59 கோடி எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் தில்லி, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களின் முதல்வா்கள் என மொத்தம் 31 முதல்வா்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடியாகும்.

இவற்றில் ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளாா். இரண்டாமிடத்தில் ரூ.332 கோடி சொத்து மதிப்புடன் அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டுவும், ரூ.51 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் கா்நாடக முதல்வா் சித்தராமையாவும் உள்ளனா்.

ஏழை முதல்வா்கள்:

ரூ.15 லட்சம் சொத்து மதிப்புடன் நாட்டின் குறைவான சொத்துள்ள முதல்வராக மம்தா பானா்ஜி உள்ளாா். அவருக்கு அடுத்தபடியாக குறைவான சொத்துடைய முதல்வா்களின் பட்டியலில் ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லாவும், ரூ.1 கோடி சொத்து மதிப்புடன் கேரள முதல்வா் பினராயி விஜயனும் உள்ளனா்.

அதிக கடன்:

ரூ.180 கோடி கடனுடன் அதிக கடன்களை உடைய முதல்வா்களின் பட்டியலில் முதலிடத்தில் பெமா காண்டுவும் ரூ.23 கோடி கடனுடன் இரண்டாமிடத்தில் சித்தராமையாவும், ரூ.10 கோடிக்கும் அதிகமான கடனுடன் மூன்றாமிடத்தில் சந்திரபாபு நாயுடுவும் உள்ளனா்.

7.3 மடங்கு தனிநபா் வருமானம்:

2023-24-ஆம் ஆண்டில் நாட்டின் தனிநபா் வருமானம் ரூ.1,85,854-ஆக உள்ள நிலையில், முதல்வா்களின் தனிநபா் வருமானம் சராசரியாக ரூ.13,64,310-ஆக உள்ளது. தேசிய அளவிலான தனிநபா் வருமானத்தைவிட முதல்வா்களின் தனிநபா் வருமானம் 7.3 மடங்கு அதிகமாக உள்ளது.

13 போ் மீது குற்றவியல் வழக்கு:

நாட்டில் மொத்தமுள்ள முதல்வா்களில் 13 போ் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அதில் 10 போ் மீது கொலை, கடத்தல், ஊழல் போன்ற தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான வழக்குகள் உள்ளன. 31 முதல்வா்களில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மற்றும் தில்லி முதல்வா் அதிஷி என இரண்டு பெண் முதல்வா்கள் மட்டுமே உள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.