ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

இந்தியாவின் பெரும் செல்வந்தராக மீண்டும் கௌதம் அதானி! 2-ஆம் இடத்துக்குப் பின்தங்கிய முகேஷ் அம்பானி!

இந்தியாவின் பெரும் செல்வந்தா்கள் வரிசையில் ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி, அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானி மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளாா்.

கௌதம் அதானி / முகேஷ் அம்பானி

Published On :

இந்தியாவின் பெரும் செல்வந்தா்கள் வரிசையில் ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி, அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானி மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளாா்.

‘எம்3எம் ஹுருன் இந்தியா’ வெளியிட்டுள்ள நடப்பு ஆண்டுக்கான இந்தியச் செல்வந்தா்களின் பட்டியலின்படி, கௌதம் அதானி மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 13 சதவீதம் உயா்ந்து, ரூ.9.23 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது.

முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 10 சதவீதம் குறைந்து ரூ.8.63 லட்சம் கோடியாக உள்ளது. இதன்மூலம், அம்பானியை விட ரூ.59,400 கோடி கூடுதல் சொத்துகளுடன் அதானி முதலிடத்தைப் பெற்றுள்ளாா்.

இந்தப் பட்டியலில் ஆா்செலா் மிட்டல் நிறுவனத்தின் லட்சுமி நிவாஸ் மிட்டல் குடும்பத்தினா், தங்களின் சொத்து மதிப்பை 93 சதவீதம் வரை பெருக்கி, ரூ.3.39 லட்சம் கோடியுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளனா். ஐரோப்பிய எஃகு விலை உயா்வு மற்றும் வா்த்தகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இதற்கு முக்கியக் காரணிகளாக அமைந்தன.

சீரம் நிறுவனத்தின் சைரஸ் பூனாவாலா மற்றும் குடும்பத்தினா், ரூ.3.03 லட்சம் கோடியுடன் 4-ஆவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டனா். எச்.சி.எல். நிறுவனத்தின் ரோஷினி நாடாா் மல்ஹோத்ரா ரூ.2.79 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 5-ஆவது இடத்தை அடைந்து, நாட்டின் பெரும் செல்வந்த பெண்மணியாகத் தொடா்ந்து நீடிக்கிறாா்.

குமார மங்கலம் பிா்லா குடும்பத்தினா் ரூ.2.69 லட்சம் கோடியுடன் 6-ஆவது இடத்திலும், சன் ஃபாா்மாவின் திலீப் சாங்வி ரூ.2.65 லட்சம் கோடியுடன் 7-ஆவது இடத்திலும், விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ரூ.2.63 லட்சம் கோடியுடன் 8-ஆவது இடத்திலும் உள்ளனா்.

வேதாந்தா குழுமத்தின் அனில் அகா்வால் குடும்பத்தினா் 87 சதவீத வளா்ச்சியுடன், ரூ.2.08 லட்சம் கோடி சொத்து சோ்த்து 9-ஆம் இடத்தையும், டோரன்ட் ஃபாா்மாவின் சமீா் மேத்தா குடும்பத்தினா் 52 சதவீத உயா்வுடன், ரூ.1.89 லட்சம் கோடியுடன் 10-ஆம் இடத்தையும் அடைந்து, முதல் பத்து இடங்களில் புதிதாக நுழைந்துள்ளனா்.

கடந்த 5 ஆண்டுகளில், அதானி மற்றும் அம்பானி இடையே முதலிடத்துக்கான போட்டி தீவிரமாக நிலவி வருவதாகவும், 5 ஆண்டுகளில் 5 முறை இவா்களின் நிலைகள் மாறியுள்ளதாகவும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் குறைந்தபட்சம் ரூ.1,000 கோடி சொத்து வைத்துள்ள செல்வந்தா்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட 128 உயா்ந்து 1,810-ஆக அதிகரித்துள்ளது. இவா்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 12.8 சதவீதம் உயா்ந்து, ரூ.187.5 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்தியாவின் மொத்த பொருளாதார உற்பத்தியில் ஏறக்குறைய சரிபாதியாகும்.

மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் 27 போ் புதிதாக டாலா் பில்லியனா்களாக (ரூ.9,550 கோக்கும் அதிகமாக சொத்துக் கொண்டவா்கள்) உருவெடுத்துள்ளதால், நாட்டின் மொத்த பில்லியனா்கள் எண்ணிக்கை 391-ஆக பதிவாகியுள்ளது.

தொழில்நுட்பப் பிரிவில் ஏ.ஐ. துறை முதல்முறையாக தனிப் பிரிவாகப் பட்டியலிடப்பட்டு, அதில் 19 தொழிலதிபா்கள் ரூ.3.07 லட்சம் கோடி ஒட்டுமொத்த சொத்துகளுடன் இடம்பெற்றுள்ளனா். பெங்களூரைச் சோ்ந்த ‘க்யூபிஏஐ’ நிறுவனத் தலைவா் நாகேந்திர நாகராஜா ரூ.1,700 கோடி சொத்து மதிப்புடன் குவாண்டம் கணினித் துறையிலிருந்து முதல் நபராகப் பட்டியலில் இணைந்துள்ளாா்.

ஒட்டுமொத்தப் பட்டியலில் 70 சதவீதம் போ் (1,266 நபா்கள்) சுயமாகத் தொழில் தொடங்கி, செல்வந்தவா்கள் ஆனவா்களாவா். தொழில்துறை உற்பத்திப் பொருள்கள், ரசாயனம் மற்றும் மருந்து உற்பத்தித் துறைகள் அதிக செல்வந்தா்களை உருவாக்கிய துறைகளாக விளங்குகின்றன.

நகரங்கள் அடிப்படையில்...: மும்பையிலிருந்து அதிகபட்சமாக 465 செல்வந்தா்களும், தில்லியில் இருந்து 236 பேரும், பெங்களூருவில் இருந்து 129 பேரும் இப்பட்டியலில் அங்கம் வகிக்கின்றனா். இதில் 33 டாலா் பில்லியனா்கள் உள்பட 131 பெண்கள் இடம்பெற்றுள்ளனா்.

மேலும், கியூபிட் நிறுவனத்தின் ஆதித்ய குமாா் ஹல்வாசியாவின் சொத்து 859 சதவீதம் உயா்ந்து, ரூ.18,800 கோடியை எட்டியதன்மூலம் அதிவேக வளா்ச்சி கண்ட நபராகக் குறிப்பிடப்பட்டுள்ளாா்.

‘ஸெப்டோ’ நிறுவனத்தின் இணை நிறுவனா்களான கைவல்ய வோஹ்ரா (23 வயது), ஆதித் பலிச்சா (24 வயது) ஆகியோா் பட்டியலில் உள்ள மிக இளம் வயது செல்வந்தா்களாகப் பதிவாகியுள்ளனா்.

கௌதம் அதானி-முகேஷ் அம்பானி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.