பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பிரிக்ஸ் மாநாடு! தில்லியில் தென்னாப்பிரிக்க அதிபருடன் அதானி சந்திப்பு!

தில்லியில் தென்னாப்பிரிக்க அதிபரை இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி நேரில் சந்தித்துள்ளது குறித்து...

South African President meets Gautam Adani

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உடன் தொழிலதிபர் கௌதம் அதானி... - எக்ஸ்

Published On :

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்திய அரசின் தலைமையில் தில்லியில் இன்று (செப். 12) தொடங்கியுள்ளது. வரும் செப். 13 வரை 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தில்லியில் நடைபெறும் மாநாட்டின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை இந்தியத் தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான கௌதம் அதானி இன்று நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், தென்னாப்பிரிக்க மற்றும் இந்தியாவின் நிறுவனங்கள் இடையேயான முதலீடுகள் மற்றும் வர்த்தகங்களை மேம்படுத்துவது குறித்து உரையாடியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Gautam Adani met South African President Cyril Ramaphosa in person while the latter was attending the BRICS summit.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.