FOLLOW US

ON GOOGLE DISCOVER

தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

9,500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிய தென்னாப்பிரிக்க டி20 கிரிக்கெட் லீக்!

9,500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிய தென்னாப்பிரிக்க டி20 லீக்கைப் பற்றி...

தென்னாப்பிரிக்க டி20 கிரிக்கெட் லீக். - (கோப்புப்படம்)

Published On :25 ஆகஸ்ட் 2026, 4:32 pm IST

தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படும் எஸ்.ஏ.20 லீக் தொடரால் அங்கு சுமார் 9,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்று தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படுகின்றன.

தென்னாப்பிரிக்காவில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் எஸ்.ஏ.20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் உலகம் முழுவதும் உள்ள வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

எஸ்.ஏ.20 லீக் தொடரின் 5-ஆவது சீசனுக்காக அணிகள் தயாராகி வரும் வேளையில், இதுவரை நடைபெற்ற லீக் தொடரின் மூலமாக நாட்டின் உள்நாட்டு உற்பத்தி இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4,000 கோடி (406 மில்லியன் டாலர்) வரை உயர்ந்திருப்பதாக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கிரிக்கெட்டை சார்ந்து ஜெர்ஸி விற்பனையாளர்கள் உள்ளிட்ட வேலைகள் உள்பட இந்த தொடர் மூலமாக ஓராண்டுக்கு 9,470 பேருக்கு வேலைகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூன்றாவது சீசனில் 112 மில்லியன் டாலரில் இருந்து 137 மில்லியனுக்கு உயர்ந்தது. ஆனால், இந்த சீசனில் 406 மில்லியனாக உயர்ந்து மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த சீசனில் 23 சதவிகித வளர்ச்சி கண்ட எஸ்ஏ20 இந்த சீசனில் மட்டுமே 66.26 சதவிகிதம் வளர்ச்சியை அளித்துள்ளது.

Summary

South Africa's SA20 League delivered its strongest economic performance to date in its fourth season, contributing $406 million to the country's gross domestic product and creating or sustaining 9,470 annualised jobs, according to an independent Economic Impact Assessment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.