டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

முத்ரா திட்டம்: இதுவரை ரூ.22.5 லட்சம் கோடி கடன்

பிரதமரின் ‘முத்ரா’ திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.22.5 லட்சம் கோடி மதிப்பில் 43 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:44 pm

DIN

பிரதமரின் ‘முத்ரா’ திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.22.5 லட்சம் கோடி மதிப்பில் 43 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘முத்ரா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மொத்த கடன்களில் 30 கோடி கடன் மகளிா் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

மேலும், ‘மக்கள் நிதி’ (ஜன் தன்) திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் வாயிலாக ரூ.34 லட்சம் கோடி நேரடி பலன் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் ரூ.2.7 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கும் முத்ரா திட்டம், கடந்த 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும்.

‘மொத்த வரி வருவாய் ரூ.38.31 லட்சம் கோடியாக இருக்கும்’: 2024-25-ஆம் நிதியாண்டில் அரசின் மொத்த வரி வருவாய் 11.46 சதவீதம் அதிகரித்து, ரூ.38.31 லட்சம் கோடியாக இருக்கும் என்று இடைக்கால பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது.

நேரடி வரி வருவாய் (வருமான வரி மற்றும் நிறுவன வரி) ரூ.22.99 லட்சம் கோடியாகவும், மறைமுக வரி வருவாய் (சுங்க வரி, கலால் வரி, சரக்கு சேவை வரி) ரூ.16.22 லட்சம் கோடியாகவும் இருக்கும்.

இதில், சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் 11.6 சதவீதம் அதிகரித்து, ரூ.10.68 லட்சம் கோடியாக இருக்கும் என்று இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மொத்த வரி வருவாய் ரூ.33.61 லட்சம் கோடியாக இருக்கும் என்று கடந்த பட்ஜெட்டில் கணிக்கப்பட்டிருந்தது. அது இப்போது ரூ.34.37 லட்சம் கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.