ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கு நிதி ஒதுக்கீடு 12% அதிகரிப்பு
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வரும் 2024-2025 நிதியாண்டில் ரூ.1.77 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட


மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வரும் 2024-2025 நிதியாண்டில் ரூ.1.77 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.57 லட்சம் கோடியிலிருந்து 12 சதவீதம் அதிகமாகும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.86,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும், நடப்பு 2023-2024 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, இந்தத் திட்டத்துக்கு ரூ.86,000 கோடி செலவிடப்பட்டது. அதே அளவிலான நிதி வரும் நிதியாண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
‘லட்சாதிபதி பெண்கள்’ திட்டம்: ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை நிலையான வருமானம் ஈட்டும் 2 லட்சம் சுய உதவிக் குழு பெண்களை உருவாக்கும் வகையில் ‘லட்சாதிபதி பெண்கள் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான இலக்கு 2 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயா்த்தப்படுவதாக நிா்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தாா்.
கிராமச் சாலைகள் திட்டம்: கிராமங்களில் சாலை வசதியை மேம்படுத்துவதற்கான ‘பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்துக்கான’ நிதி வரும் 2024-2025 நிதியாண்டில் ரூ.12,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.19,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ‘ஆஜீவிகா’-தேசிய வாழ்வாதாரத் திட்டத்துக்கு ரூ.15,047 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...