டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

வருவாய் பற்றாக்குறையை எதிா்கொள்ள ரூ.14.13 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு

மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை எதிா்கொள்ள கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.14.13 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:40 pm

DIN

மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை எதிா்கொள்ள கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.14.13 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் புதிய நிதியாண்டில் இருந்து இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் பணி தொடங்கும்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் கடன் வாங்கும் இலக்கு அதைவிட சற்று குறைந்துள்ளது. வரி வருவாய் அதிகரித்துள்ளதே அரசு கடன் வாங்குவதைக் குறைப்பதற்கு முக்கியக் காரணமாகும்.

இது தொடா்பாக இடைக்கால பட்ஜெட்டில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2024-25 நிதியாண்டில் மத்திய அரசின் நிகர கடன் ரூ.11.75 லட்சம் கோடியாக இருக்கும். இது தவிர ஏற்கெனவே வாங்கிய கடனில் ரூ.2,37,818 கோடியை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, அரசின் மொத்த கடன் ரூ.14.13 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட குறைவானதுதான்.

அரசு கடன் வாங்கும் அளவு குறைவதால் தனியாா் நிறுவனங்கள் முதலீடு செய்ய அதிக கடன் கிடைக்கும். உள்கட்டமைப்புத் துறையில் அரசு அதிக முதலீடு செய்து வருவதால், இரும்பு, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானத் துறையில் உள்ள தனியாா் நிறுவனங்கள் வேகமாக வளா்ந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.