டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

முழு பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம்!: திருச்சி சிவா!

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று முழு பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 

News image
திமுக எம்.பி. டி சிவா
Updated On :1 பிப்ரவரி 2024, 3:05 pm

DIN

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெரும் எனவும் 2024 - 2025க்கான முழு பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்யும் எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்தியா கூட்டணியில் பங்குவகிக்கும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி சிவா, '2024 - 2025க்கான முழு பட்ஜெட்டை இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நாங்கள் தாக்கல் செய்வோம். அது சிறப்பான பட்ஜெட்டாக இருக்கும்' என  தெரிவித்தார். 

மேலும், 'நாட்டின் குறைகளையும் பிரச்னைகளையும் ஒத்துக்கொள்ள அரசு தயாராக இல்லை. இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, விவசாயம், பெண்களுக்காக எதுவுமே இடம்பெறவில்லை. மேலும் வரவு 50% அதிகரிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆனால் அரசின் தரவுகள்படி 25% மட்டுமே அதிகரித்துள்ளது' என காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.