கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தைக்கு ஜிஎஸ்டி உதவியாக உள்ளது: நிா்மலா சீதாராமன்

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தைக்கு ஜிஎஸ்டி உதவியாக இருக்கிறது. மக்களின் சராசரி வருமான 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:36 am

DIN

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தைக்கு ஜிஎஸ்டி உதவியாக இருக்கிறது. மக்களின் சராசரி வருமான 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

17 ஆவது நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடரின் பட்ஜெட் கூட்டத்தொடரும், நாடப்பாண்டின் முதல் கூட்டம் குடியரசுத் தலைவா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப். 1)காலை 11 மணியளவில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். 

அப்போது, ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தைக்கு ஜிஎஸ்டி உதவியாக இருக்கிறது. மக்களின் சராசரி வருமான 50 சதவிகிதம்  அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பரவலுக்கு பின்னர் உலக ஒழுங்கு மாறியிருக்கிறது. 

முத்தலாக் தடை, பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 28 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இளைஞர்களுக்கு 22.5 லட்சம் கோடி தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.