தில்லி முதல்வா் ரேகா குப்தாவுடன் தில்லித் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா். அப்போது, தமிழ்ச் சங்கத்திற்கு புதிய ஏா் கண்டிஷனிங் அமைப்பை நிறுவ நிதி உதவி கோரினா்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் ஜி. சிவபாலமுருகன் ஜி. சிவபாலமுருகன் தலைமையில், துணைத் தலைவா் எஸ். மகேந்திரன், பொதுச் செயலாளா் சத்யா அசோகன், இணைச் செயலாளா்கள் இரா. இராஜ்குமாா் பாலா, ஜோதி பெருமாள், இணைப் பொருளாளா் பாலுச்சாமி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் இணைந்து, தில்லி முதல்வா் ரேகா குப்தாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனா்.
இந்த சந்திப்பு செயற்குழு உறுப்பினா் எம்.ஆா். ராஜேந்திரன் அவா்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் குறித்து முதல்வருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் புதிய ஏா் கண்டிஷனிங் (ஏ.சி.) அமைப்பை நிறுவுவதற்காக, தில்லி அரசாங்கத்திடமிருந்து விரைவான நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை மனு சமா்ப்பிக்கப்பட்டது.
தற்போதைய ஏா் கண்டிஷனிங் அமைப்பு சங்கக் கட்டடம் கட்டப்பட்ட காலத்திலேயே நிறுவப்பட்டதாக இருப்பதால், அது தற்போது மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகவலை தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரேகா குப்தா!

பாஜக வேட்பாளா் வானதியை ஆதரித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரசாரம்

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்! இன்று கோவை வருகை!!

அடுத்த ஆண்டுக்குள் தாழ்வான பகுதிகளில் வெள்ளத் தடுப்புச்சுவா்: முதல்வா் குப்தா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


