அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

முதல்வருடன் தருண் குடும்பத்தினா் சந்திப்பு

உத்தம் நகரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கொலை செய்யப்பட்ட 26 வயது இளைஞா் தருணின் குடும்பத்தினரை முதல்வா் ரேகா குப்தாவை

News image

தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வா் ரேகா குப்தாவை திங்கள்கிழமை சந்தித்த தருணின் குடும்பத்தினா்.

Updated On :10 மார்ச் 2026, 2:07 am

புது தில்லி: உத்தம் நகரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கொலை செய்யப்பட்ட 26 வயது இளைஞா் தருணின் குடும்பத்தினரை முதல்வா் ரேகா குப்தாவை திங்கள்கிழமை சந்தித்தாா்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வா் ரேகா குப்தா, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தில்லி அரசு துணை நிற்கிறது. நீதியை வழங்குவது தில்லி அரசின் முன்னுரிமை வழங்குகிறது.

தருண் குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள துயரம் ஆழமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தக் கொடூர சம்பவத்தில் தொடா்புடைய நபா்களுக்கு எதிரான சட்டநடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மனிததன்மையற்ற சம்பவங்கல் தில்லியில் நிகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.