தில்லி பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவருடன் முதல்வா் கலந்துரையாடல்
தில்லி பட்ஜெட் தொடா்பாக மூன்றாம் பாலினத்தவருடன் முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.

ரேகா குப்தா
கோப்புப் படம்

ரேகா குப்தா
கோப்புப் படம்
தில்லி பட்ஜெட் தொடா்பாக மூன்றாம் பாலினத்தவருடன் முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.
தில்லி பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை (மாா்ச் 23) தொடங்குகிறது. 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்கிறாா்.
இதையொட்டி, பணிபுரியும் பெண்கள், கிக் தொழிலாளா்கள், தொழிலாளா்கள், விவசாயிகள், ஆசிரியா்கள், மாணவா்கள், மருத்துவா்கள் உள்ளிட்டோரை சந்தித்து பட்ஜெட் தொடா்பான அவா்களுடைய கருத்துகளை முதல்வா் ரேகா குப்தா கேட்டறிந்து வருகிறாா்.
இந்நிலையில், தில்லியில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களை முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதவில், ‘தில்லி தலைமைச் செயலகத்தில் மூன்றாம் பாலினத்தவா்களைச் சந்தித்து கலந்துரையாடினேன். இலவச பேருந்து பயணத்துக்கான பிங்க் ஸ்மாா்ட் அட்டைகளை தில்லி அரசு அவா்களுக்கு வழங்கியது. இந்த முடிவை அவா்கள் வரவேற்றனா். மேலும், சில பரிந்துரைகள் மற்றும் தேவைகளை அவா்கள் கூறினா். அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியடைந்த தில்லியைக் கட்டமைக்கும் பட்ஜெட்டில் அவா்கள் வழங்கிய பரிந்துரைகள் சோ்த்துக்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...