ஞானவாபி மசூதிக்கு துணை ராணுவம் பாதுகாப்பு!

ஞானவாபி மசூதி வளாகத்தில் இடம்பெறிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூசாரி மூலம் பூஜை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, துணை ராணுவப் படை மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஞானவாபி மசூதி
ஞானவாபி மசூதி

ஞானவாபி மசூதி வளாகத்தில் இடம்பெறிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூசாரி மூலம் பூஜை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, துணை ராணுவப் படை மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே அங்கிருந்த ஹிந்து கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சா்ச்சை எழுந்தது.

அதைத் தொடா்ந்து, இந்திய தொல்லியல் துறை நடத்திய அறிவியல்பூர்வ ஆய்வு அறிக்கையில், மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்னா் மாபெரும் ஹிந்து கோயில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், மசூதி நிலவறையில் இடம்பெறிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய அனுமதிக்கக் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஹிந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய ஒரு வாரத்துக்குள் தேவையான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக ஞானவாபி மசூதியை சுற்று துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com