விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

முறையான உணவு தராததால், தாயைக் கம்பியால் அடித்து கொன்ற மகன்!

17 வயது கல்லூரி மாணவர் தனது தாயை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 1:51 pm

DIN

பெங்களூரு: 40 வயதான தாயை இரும்பு கம்பியால் தாக்கி 17 வயது மகன் கொன்றதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு கே.ஆர்.புரம் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் வீட்டில் இருவரைத் தவிர வேறு யாருமில்லை எனவும் தெரிகிறது.

டிப்ளமோ படித்துவரும் இளைஞன், அவரது தாய் நேத்ராவை இரும்பு கம்பி கொண்டு தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

விசாரணையின்போது, தாயார் தன்னை முறையாக பார்த்து கொள்ளவில்லை என்றும் சரியான உணவு தருவதில்லை என்றும் இளைஞர் தெரிவித்துள்ளார்.

கல்லூரிக்கு புறப்படும்போது தாய் திட்டியதாகவும் அது வாக்குவாதமாக வளர்ந்ததாகவும் அவர் கூறினார்.

தாயாரைத் தாக்கிவிட்டு இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இளைஞனின் மூத்த சகோதரி ஒருவர் ஜியார்ஜியாவில் மருத்துவ படிப்பில் உள்ளார். 

இது  குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.