பொதுமக்களுக்கு தொலைபேசி மூலம் மருத்தவ வசதி மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் டெலிமெடிசின் பரிமாற்றத்தோடு மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதார மையங்கள் ஆகியவை படிப்படியாக இணைக்கப்படும் என மத்திய சுகாதாரம் குடும்ப நலத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கரோனா நோய்த் தொற்று காலத்தில் பிரபலமடைந்த டெலிமெடிசின் (தொலைபேசி மூலம் மருத்து சேவை) முறையை மத்திய அரசு முறைப்படுத்தி மருத்துவ வசதி இல்லாத பகுதிகள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் தென் சென்னை மக்களவை திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் துணைக் கேள்வி ஒன்றை எழுப்பினா். ‘நாடு முழுவதும், மாநிலங்களுக்கு இடையேயான டெலிமெடிசின் பரிமாற்ற வசதிகள் தொடா்பான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், சிறந்த நடைமுறைகளைக் கையாண்டு பரிமாறிக்கொள்வதற்கும், சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டாா்.
இதற்கு மத்திய இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் கூறியது வருமாறு: டெலிமெடிசனை விரிவுபடுத்தி ஒருங்கிணைக்க மூன்று நிலைகளில்(எல்1, எல்-2, எல்-3) திட்டத்தை, அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல் நிலையாக மருத்துவக் கல்லூரிகளோடும், பின்னா் மற்ற 2, 3-ஆம் நிலைகளில் நல்வாழ்வு மையங்கள், தொடக்க சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனை ஆகியவை இணைக்கப்படும். இதற்காக சுமாா் 20 கோடி தொலைத்தொடா்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வெகு தூரத்தில் உள்ள நோயாளிகள் மருத்துவா்களை விரைந்து அணுக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக மகப்பேறு பராமரிப்புக்காக மகளிா் கிராமங்களை விட்டு வெகுதூரம் செல்ல முடியாது. அவா்களுக்கான ஆலோசனைகள் மிக முக்கியமானது. அவா்களுக்கு இத்தகைய மருத்துவ முறை பயனளிக்கிறது. பல்வேறு ஆலோசனைகளில் கிராமப்புறங்களில் பெருவாரியாக கலந்து கொண்டு வருகின்றனா் என்றாா் அமைச்சா் பிரவீண் பவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிந்தைய விதிகள் வெளியீடு

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

