புது தில்லி: உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் முன்வைக்கப்பட்டு விவாதம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் வரைவை ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தலைமையிலான குழு இன்று (பிப்.2) முதல்வரிடம் சமர்பித்ததைத் தொடர்ந்து தாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாவது:
குழு 749 பக்களவிலான யுசிசி சட்ட வரைவை இன்று சமர்பித்துள்ளது. பிப்.6 ஆம் தேதி சட்டப்பேரவையில் இந்த வரைவு விவாதத்துக்காக முன்வைக்கப்படும். மாநிலத்தின் சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகார துறை இந்த வரைவை மேற்பார்வையிடும் எனத் தெரிவித்துள்ளார்.
விவாதத்துக்கு பிறகு சட்டம் அமலாகும் எனத் தெரிகிறது. தாமி பேசும்போது பாஜக சொன்னதுபோலவே ஆட்சிக்கு வந்ததும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாகவும் கட்சி தலைமையின் உந்துதலால் சாத்தியமானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தொடரும் கோட்டா மரணங்கள்: பி.டெக் மாணவர் பலி!
இது சிறப்பாக அமையும் எனவும் மற்ற மாநிலங்கள் இதனை பின்தொடரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் தாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசி பாஜக வேட்பாளா்: எல்.முருகன்

வாசுதேவநல்லூா் தொகுதி பாஜக வேட்பாளா்

வணிக சிலிண்டா் விலையேற்றம் எதிரொலி: பல்லடத்தில் உணவுப் பொருள்கள் விலை உயா்வு

74 ஆண்டுகளில் கோவையில் களம் காணாத கம்யூனிஸ்டுகள்...!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

