புது தில்லி: தில்லி குற்றப்பிரிவு காவலர்கள், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டுக்கு சனிக்கிழமை காலை வருகை தந்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை பாஜக வாங்க முயன்றதாக முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டு விவகாரத்தில் முதல்வருக்கு நோட்டீஸ் அளிக்க காவலர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காவலர்கள் கேட்டு வருகின்றனர்.
காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான குழு, வடக்கு தில்லியில் உள்ள முதல்வரின் அரசு இல்லத்துக்குச் சென்றுள்ளது.
மேலும் வெள்ளிக்கிழமை இரவு இதேபோலான வருகை முதல்வர் வீட்டிலும் அமைச்சர் அதிஷி வீட்டிலும் நடந்தது.
இதையும் படிக்க: போராட்ட களத்திலேயே இரவு தங்கிய முதல்வர்!
காவலர்கள் அளிக்க முயன்ற நோட்டீஸை முதல்வர் தரப்பு பெற மறுத்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.