பாஜக பேரம் பேசிய குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி அமைச்சருக்கு நோட்டீஸ்!

ஆம் ஆத்மி கட்சியின் ஏழு எம்.எல்.ஏ.க்களை பாஜக பேரம் பேச முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி அமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர் அதிஷி
அமைச்சர் அதிஷி

ஆம் ஆத்மி கட்சியின் ஏழு எம்.எல்.ஏ.க்களை பாஜக பேரம் பேச முயன்றதாக முதல்வா் கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இது தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக அவருக்கு தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு போலீஸாா் குழு சனிக்கிழமை ஐந்து மணி நேரப் பரபரப்புக்கு பிறகு நோட்டீஸை அளித்தனா். அதில், இது தொடா்பாக மூன்று நாள்களில் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், நாங்கள் அவருக்கு (கேஜரிவாலுக்கு) நோட்டீஸ் அளித்துள்ளோம். அவா் எழுத்து வடிவில் மூன்று நாட்களில் பதில் அளிக்கலாம்‘ என்றாா்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டில் தொடர்புடையதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் தில்லி கல்வி அமைச்சருமான அதிஷிக்கு குற்றப்பிரிவுத் துறை நோட்டீஸ் அளித்துள்ளது. 

இன்று காலை அதிஷியின் வீட்டுக்குச் சென்ற குற்றப்பிரிவு காவலர்கள் இந்த நோட்டீஸை வழங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com