எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நான் சிறையில் அடைக்கப்பட்டாலும் அரசின் வளர்ச்சிப் பணிகள் நிற்காது: அரவிந்த் கேஜரிவால் 

தான் சிறைக்கு அனுப்பப்பட்டாலும் அரசின் வளர்ச்சிப் பணிகள் நிற்காது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.  

News image
அரவிந்த் கேஜரிவால் | கோப்பு
Updated On :4 பிப்ரவரி 2024, 9:48 am

DIN

தான் சிறைக்கு அனுப்பப்பட்டாலும் அரசின் வளர்ச்சிப் பணிகள் நிற்காது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.  

கிராரியில் இரண்டு பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டிய கேஜரிவால் பேசியதாவது, மணீஷ் சிசோடியா பள்ளிகளும், சத்யேந்தர் ஜெயின் மொஹல்லா கிளினிக்குகளை கட்டியதால்தான் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அனைத்து மத்திய அமைப்புகளும் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

ஆனால், நீங்கள் என்னை சிறையில் அடைத்தாலும், தில்லி மக்களுக்கு பள்ளிகள் கட்டுவது, மொஹல்லா கிளினிக்குகள் மூலம் இலவச சிகிச்சை அளிப்பது ஆகிய பணிகள் நிற்காது. 

நாங்கள் தங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது, ஆனால் நாங்கள் தலைவணங்க மாட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.