மணிப்பூருக்கு நேரில் செல்ல பிரதமர் மோடிக்கு இன்று வரை நேரமில்லை -காங். தலைவர் கார்கே விமர்சனம்

மணிப்பூர் மக்களை இன்று வரை நேரில் சென்று பார்வையிட பிரதமர் மோடிக்கு நேரமில்லை என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்துள்ளார்.
மல்லிகார்ஜுன் கார்கே
மல்லிகார்ஜுன் கார்கே

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நிகழ்ந்த தொடர் வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மணிப்பூர் மக்களை பிரதமர் மோடி  இன்று வரை நேரில் சென்று பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் கார்கே தெரிவித்திருப்பதாவது,  

மணிப்பூரில் 9 மாதங்களை கடந்து தொடர்ந்த வன்முறை ஏராளமான உயிர்களை சிதைத்துள்ளது. இநிலையில், மணிப்பூரில் நேரில் சென்று பார்வையிட பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரமில்லை. அவர் கடைசியாக மணிப்பூருக்கு தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மணிப்பூருக்கு சென்றார். அதன்பின் இன்னும் அங்கு செல்லவில்லை.

கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி தொடங்கி இதுவரை மணிப்பூரில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 50,000 பேர் இன்னும் நிவாரண முகாம்களில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் உணவின்றி வாடுகின்றனர். பெண்களும் குழந்தைகளும் பரிதவித்து வருகின்றனர்.  சூரசந்த்பூர் பகுதியில் மட்டும் நிவாரண முகாம்களில் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமாக மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றனதே தவிர, மாநில அரசிடமிருந்து எவ்வித உதவிகளும்
வழங்கப்படவில்லை.

மக்கள் ஏற்கனவே தங்கள் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 2023 ஆகஸ்டில் மணிப்பூர் மக்களுக்கு  நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது, மணிப்பூரில் அமைதியும் இயல்புநிலையும் திரும்பவில்லை என்று கார்கே தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com