ராகுலின் நடைப்பயணத்துக்கான அழைப்பு: அகிலேஷ் யாதவ் ஏற்பு

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரைக்கான அழைப்பை அகிலேஷ் யாதவ் ஏற்றுள்ளார்.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் காங்கிரஸின் பாரத் ஜோடா யாத்திரைக்கான அழைப்பை ஏற்றுள்ளார். பிப்.16-ம் தேதி உத்தர பிரதேசத்தில் நுழையவிருக்கும் யாத்திரையில் அவர் பங்கேற்கவுள்ளார்.

இந்தியா கூட்டணி கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சிக்கு ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அழைப்பில்லை என அகிலேஷ் குற்றச்சாட்டு எழுப்பினார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.

அதனை ஏற்றுள்ள அகிலேஷ், அமேதி அல்லது ரேபரேலி பகுதியில் யாத்திரை நடைபெறும்போது பங்கெடுக்கவுள்ளார்.

சமூக நீதி மற்றும் பரஸ்பர ஒருமைப்பாடுக்கான சமஜ்வாதியின் போராட்டத்தை இந்தப் பயணம் முன்னெடுத்து செல்லும் என எதிர்பார்ப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com