மரக் கட்டைகளை பகிர்வதில் ஏற்பட்ட தகராறு: ஜார்க்கண்டில் 3 பேர் கொலை

ஜார்க்கண்டில் வெட்டப்பட்ட மரத்தின் கட்டைகளை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜார்க்கண்டில் வெட்டப்பட்ட மரத்தின் கட்டைகளை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் வெட்டப்பட்ட மரத்தின் கட்டைகளை பகிர்ந்துகொள்வதில் இன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கோடரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியது. அவர்களில் ஒருவர், தான் வைத்திருந்த கோடாரியால் நான்கு பேரைத் தாக்கினார். 

சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர், ஒருவர் பலத்த காயமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com