காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 'இது ஊழல்வாதிகளின் பொற்காலம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் உள்ள அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
மத்திய தில்லியை நொய்டா, காஜியாபாத்துடன் இணைக்கும் ரூ. 777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான் சுரங்கப்பாதை ஒரே ஆண்டில் பயன்பாட்டுக்கு தகுதியில்லாத சுரங்கவழிப் பாதையாகிவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
'அனைத்து முன்னேற்ற திட்டங்களுக்கும் ஒழுங்கான திட்டமிடுதல்களைச் செய்யாமல் வெறும் 'மாடலிங்'கில் கவனம் செலுத்திவருகிறார் பிரதமர் மோடி' என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: ராமர் கோயில் குறித்து மக்களவையில் விவாதம்!
'அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகிய நிறுவனங்கள் ஊழலுக்கு எதிராக வேலை செய்வதற்குப் பதிலாக ஜனநாயகத்துக்கு எதிராக வேலை செய்கின்றன' எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

